திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் கடடிடத்தில் ராஜேஷ் என்பவர் குடும்பத்துடன் தங்கி கொத்தனார் வேலை பார்த்துவருகிறார்.
இவர் இரவு தூங்கும்போது வைத்திருந்த 2 செல்ஃபோன்கள் மற்றும் 10000ரூபாய் காலையில் எழுந்த போது திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பாடியநல்லூரை சேர்ந்த முகமதுகனி செல்போன், பணம் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் முகமது கனியை காவல் துறையினர் கைது செய்தனர்.