திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, ஆந்திர மாநிலம் அம்மா பள்ளி அணைக்கட்டு ஆகியவை விளங்குகிறது. இதனை ஜப்பான் நாட்டின் பேரிடர் மேலாண்மை குழுவினர் 13 பேர் ஆய்வு செய்தனர்.
பின்னர், பேரிடர் காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் மழை வெள்ளங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது உள்ளிட்டவைகளை குறித்து திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கொசஸ்தலை ஆறு மற்றும் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வரைபடங்கள் வாயிலாக விளக்கினர். ஜப்பான் குழுவினரின் வருகையை பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊடகத் துறையினருக்குத் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தனர்.
இதையும் படிங்க:வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு