திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிறுகனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் லோகேஷ்(23), அதே பகுதியை சேர்ந்த அமாவாசை மகன் சிவகுமார்(36). இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள கேஜி கண்டிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த வாகனத்தின் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருத்தணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் தோல்வி... கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!