திருவள்ளூர்: பொங்கலுக்கு முந்தைய நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் போகி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் போகிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் பலர், தேவையற்றப் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி போகி பண்டிகையை கொண்டாடினர்.
பூந்தமல்லி, பொன்னேரி கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் ஊத்துக்கோட்டை மதுரவாயில்,ஆவடி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஆராவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க கொண்டாடினார்கள்.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் 'நெல்லைக் காத்த திருவிளையாடல்' நிகழ்ச்சி