திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயலில் மேல் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வரும் நிலையில் தரை தளத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (ஆக.19) காலை வங்கி ஊழியர்கள் வந்துபார்த்த போது ஏடிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரிய வந்தது.
இதே போல மொண்டியம்மன் நகர் அருகிலுள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்திலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தினை முழுமையாக உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியது. அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கிரிக்கெட் மட்டையால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன் கைது!