ETV Bharat / state

தொழிற்சாலையில் வெடிகுண்டுகளை ஆய்வு செய்த ராணுவத்தினர்! - திருவள்ளூரில் பழைய வெடிகுண்டுகள் செயலிழக்க ராணுவ அலுவலர்கள்

திருவள்ளூர் : தனியார் தொழிற்சாலையில் அபாயகரமாக வெடிக்கக்கூடிய நிலையில் உரிய பாதுகாப்பின்றி இருந்த பழைய வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய ராணுவ அலுவலர்கள், காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

exploring old bombs
author img

By

Published : Oct 30, 2019, 8:57 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பல இரும்பு உருக்குத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு அங்குள்ள தொழிற்சாலைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான்.

சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் இரும்பு உருக்கு ஆலையை ஆய்வு செய்து ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். தற்போது அவற்றை செயலிழக்கச்செய்ய பூனேவிலிருந்து வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ராணுவ சிறப்பு குழுவினர் வந்துள்ளனர்.

இந்த குழுவினைச் சேர்ந்த ராணுவ சிறப்பு நிபுணர் வேணுகோபால் நாயுடு, கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர், காவல் துறையினர் உள்ளிட்டோர் வெடிகுண்டு பொருட்களை செயலிழக்கச் செய்வதற்கான இடத்தினை தேர்வு செய்ய முடிவு செய்து இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பழைய குண்டுகளை ஆய்வு செய்யும் ராணுவத்தினர்

மேலும், 13 ஆண்டுகளுக்கு மேல் தனியார் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு பொருட்களை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சோமாலியா: அமெரிக்கா ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு!

Intro:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பின்றி அபாயகரமாக வெடிக்கக்கூடிய சூழலில் உள்ள பழைய வெடிகுண்டுகளை செயலிழக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை ....

Body:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள இரும்பு உருக்குத் தொழிற்சாலைகள் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய இரும்புப் பொருள்கள் திடீரென்று வெடித்ததால் சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்தான். தொடர்ந்து இரும்பு உருக்கு ஆலைகளை ஆய்வு செய்து ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து பாதுகாப்பாக அங்கேயே தொழிற்சாலைகளில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனை சரிசெய்யும் வகையில் பூனேவில் இருந்து வந்திருந்த வெடி குண்டு செயலிழக்கும் ராணுவ சிறப்பு நிபுணர் குழுவினர் வேணுகோபால் நாயுடு கும்மிடிபூண்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கான இடம் தேர்வு செய்யவும் முடிவு செய்து இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் 13 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ள சுமார் பத்துக்கும் மேல் உள்ள வெடிகுண்டு பொருட்களை அப்புறப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்..... பேட்டி கிரிதரன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.