திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளக்காஞ்சேரியில் தனியாருக்குச் சொந்தமான ரைஸ் மில்லில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த ரைஸ் மில்லில் நேற்று (மார்ச்.22) அதிகாலை திருப்பதி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஆந்திர காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த ரைஸ் மில்லில் ஒரு டன் எடை கொண்ட செம்மரக்கட்டையைப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ஆந்திரா காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல சென்னை துறைமுகத்திலுள்ள சுங்க சரகத்தில் இருந்து கடல் வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த சுமார் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பழங்காலத்து தங்க துகள்கள் - பெண் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி