திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உள்பட்ட சோழவரம் ஒன்றியம் அதிமுக மகளிர் குழு அறிமுகக் கூட்டம் ஆண்டார் குப்பம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தலைமையில் நடைபெற்றது.
சோழவரம்
ஒன்றியச் செயலாளர் கார்மேகம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டப்பேரவைக்கு உள்பட்ட தச்சூர், ஆண்டார்குப்பம், பெருஞ்சேரி, பஞ்செட்டி பகுதிகளைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளரும் வடக்கு மாவட்ட கழக தேர்தல் பொறுப்பாளருமான கமலக்கண்ணன் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, ஒன்றிய துணை செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.