2011ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை 205 திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆர்பிட்ரேஷன் வழக்குகளை வட்டாட்சியர் மதன் குப்புராஜ் போலி ஆவணங்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து இவர்கள் புகார் மனு கொடுத்தனர்.