ETV Bharat / state

பழக்குவியலில் சிக்கிய இளைஞர்: 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு! - Fruit godown

திருவள்ளூர்: பழக்கிடங்கில் ஏற்பட்ட ஏற்பட்ட திடீர் விபத்தில், நான்கு தொழிலாளிகள் பழக்குவியலில் சிக்கிய நிலையில், முதற்கட்டமாக மூன்று தொழிலாளிகளை மீட்ட மீட்புப்படையினர், ஒரு தொழிலாளியை மட்டும் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பழ கிடங்கு
author img

By

Published : Apr 30, 2019, 10:34 AM IST

சென்னை ஆவடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் 2,000 டன் பழங்கள் வரை சேமிக்கக்கூடிய தனியாருக்குச் சொந்தமான ராட்சத குளிர்சாதன பழக்கிடங்கு உள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை சேமித்து வைத்து பின்னர் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், கிடங்கில் போர்க் லிப்ட் இயந்திர வாகனத்தின் மூலம் பழங்களை அடுக்கும் பணியில் நான்கு வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பழப்பெட்டி சரிந்ததில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பல டன் கணக்கான பழ பெட்டிகள் சரிந்து விழுந்தன.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 இளைஞர்களும் கிடங்கில் சிக்கிக் கொண்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியாததால் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பழங்களுக்கிடையே சிக்கிய நான்கு இளைஞர்களில் மூன்று பேரை உடனடியாக காப்பாற்றினர். மற்றொரு இளைஞரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு பல யுத்திகளைக் கையாண்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

30.04.19
திருவள்ளுர்
ஆவடி

ஆவடி அருகே   ராட்சத குளிர்சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளிகள் சிக்கினர். இதில் 3 தொழிலாளிகளை மீட்ட மீட்பு படையினர் ஒரு தொழிலாளியை மீட்க 5 மணி நேரமாக போராடி வருகின்றனர்.

சென்னை ஆவடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராட்சத குளிர்சாதன பழ கிடங்கு உள்ளது.இரண்டாயிரத்து ஐநூறு டன் கொள்ளவு கொண்ட இந்த கிடங்கில்   வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பில்,ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை இங்கு தேக்கி வைத்துவிட்டு பின்னர் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் 10 க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கிடங்கில்  போர்க் லிப்ட் இயந்திர வாகனத்தின் மூலம் பழங்களை அடுக்கும் பணியில்  ஹாரிப்/23,ஜாருல்/24,சையது அக்/22,ஹயத்துல் அக்/20 ஆகிய நான்கு
ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பழ பெட்டி சரிந்தன.இதில் பணியில் இருந்த 4 பேரும் கிடங்கில் சிக்கி கொண்டனர்.பின்னர் கிடங்கின் வெளியே இருந்த தொழிலாளிகள் உள்ளே இருந்தவர்களை மீட்க போராடினார்.ஆனால் கிடங்கின் நுழைவாயில் முழுவதுமாக மூடியிருந்ததால் தொழிலாளிகளை மீட்க முடியவில்லை. பின்னர் காவல் துறையினருக்கும்,மீட்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு  மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் சரவணன் தலைமையில் பூவிருந்தவல்லி, ஆவடி,அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த  மீட்பு படையினர் கிடங்கில் இரும்பு சுவரை இயந்திரம் மூலம் வெட்டி  ஹாரிப்/23,ஜாருல்/24,சையது அக்/22, ஆகிய மூவரை உயிருடன் மீட்டனர்.மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கிடங்கில் சிக்கியிருந்த ஹயத்துல் அக்கை மீட்பதில் மட்டும் சிரமம் ஏற்பட்டது.கிடங்கில் இருந்து பல டன் பழங்கள் சிதறி கிடந்ததால் ஹயத்துல் அக்கை மீட்க சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு பல்வேறு யுக்திகளை கையாண்டனர். ஆனால் அது பலன் அளிக்காததால் கிரைன் மூலம் விடிய,விடிய மீட்பு படையினர்  ராட்சத கிரைன் வரவழைக்கப்பட்டு போராடி வருகின்றனர்.விபத்து குறித்து பூவிருந்தவல்லியில் வட்டாட்சியர் புனிதவதி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே குளிர்சாதனங் கிடங்கு என்பதால் உள்ளே 0 டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும் இதனால் கிடங்கில் சிக்கியுள்ள தொழிலாளியின் நிலை கேல்வி குறியாகியுள்ளது.அதேபோல் இந்த விபத்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.