ETV Bharat / state

ஆடி கிருத்திகை: திருத்தணியில் பக்தர்கள் சாமி தரிசனம்.

திருவள்ளூர்: திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆடி பரணி விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து தரிசனம் செய்தனர்.

ஆடி பரணி விழா காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்.
author img

By

Published : Jul 26, 2019, 4:24 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. மூலவரான முருகப்பெருமான் சிறப்பு தங்க கவச அலங்காரம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் திருக்கோயில் வளாகத்தில் உற்சவர் சண்முகர் சிவப்பு புஷ்பம் மற்றும் தங்க ஆபரணத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா

இந்நிகழ்ச்சியை காண வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துவந்து சாமி தரிசனம் செய்தனர்.

Intro:திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆடி பரணி விழா காவடி எடுத்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி கிருத்திகை திருவிழா ஆடி முதல் வாரத்தில் தொடங்கும் இந்நிகழ்ச்சி வெகு விமர்சியாக ஆடி பரணி திருவிழாவாக தொடங்கியது. மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தங்ககவசம் அலங்காரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தங்கள் காவடிகளை காவடி மண்டபத்தில் முருகப்பெருமானிடம் வேண்டிக் சமர்பித்தனர் இதேபோல் திருக்கோயில் வளாகத்தில் உற்சவர் சண்முகர் சிவப்பு புஷ்பம் மற்றும் தங்க ஆபரணத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இந்நிகழ்ச்சியை காண வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் சென்னை ஆந்திரா மாநிலம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து உடலில் அலகு குத்திக் கொண்டும் மயில் காவடி எடுத்து புஷ்ப காவடி என மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் பக்தி இன்னிசை பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலில் மிக நீண்ட வரிசையில் நின்று சுமார் 3 மணி நேரம் காத்திருந்து மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் திருத்தணி முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் பக்தர்கள் பாதுகாப்பு பணிக்காக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றவர்கள். இதேபோல் முருகன் கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.