திருவள்ளுர், கும்மிடிப்பூண்டி பஜார் அருகேயுள்ள தள்ளுவண்டி குளிர்பானக்கடையில், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நதியா என்பவர் பாதாம் கீர் குளிர்பானத்தை வாங்கியுள்ளார். அதனை குடித்துக் கொண்டிருக்கும் போது அதில் மரவட்டை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
பின்னர், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்நிலையில், நதியாவின் கணவர் சுதாகர் கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் தள்ளுவண்டி கடையின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.
மேலும், அப்பகுதியில் இருக்கும் தள்ளு வண்டிக்கடைகள், உணவு பொருட்களை விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் அப்பகுதிமக்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.