திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த திருத்தணி போலீசார் சடலத்தை மீட்டு உயிரிழந்தவர் யார் என்று முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், அவர் ஆந்திராவில் உள்ள ஸ்வீட் பேக்கரியில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.