திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பெண் ஒருவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், திருத்தணி பகுதியை ஆய்வு செய்தனர்.
இதனிடையே, திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை வைத்து பிச்சை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த அலுவலர்கள், குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். இதற்கு குழந்தையை தர மறுத்த அந்தப் பெண், அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி காவல்துறையினர், அப்பெண்ணிடம் சமரசமாக பேசி, குழந்தை மற்றும் தாயை திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: லாரி முன் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை - வெளியான சிசிடிவி வீடியோ