ETV Bharat / state

லாரி முன் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை - வெளியான சிசிடிவி வீடியோ - commit suicide auto driver

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lorry
lorry
author img

By

Published : Jul 15, 2020, 8:15 AM IST

Updated : Jul 15, 2020, 12:24 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மேத்தா நகரைச் சேர்ந்தவர் ராஜி (70). ஆட்டோ ஓட்டுநரான இவர், இன்று காலை கடைவீதிக்கு வந்துள்ளார். இந்நிலையில், குன்றத்தூர் - அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி புலனாய்வு பிரிவு காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, காவல்துறையினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சாலையின் ஓரம் வாகனங்கள் செல்வதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த ராஜி, மெதுவாக சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி மெதுவாக சாலையை கடந்தபோது, லாரியின் சக்கரத்தின் இடையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

லாரி முன்பாய்ந்த ஆட்டோ ஓட்டுநர்

இதனை காணாத அப்பகுதி மக்கள் லாரி மோதி இறந்ததாக கூறியது தெரியவந்தது. புலனாய்வு பிரிவிடம் உள்ள இந்த வழக்கு தற்போது, குன்றத்தூர் காவல்துறைக்கு மாற்றப்படவுள்ளது. ஆட்டோ டிரைவரான ராஜி கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா? என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனிதத்தை காக்கும் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா

Last Updated : Jul 15, 2020, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.