திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர்ப்புறப் பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுக்கடைகளிலிருந்து மது வாங்கிக்கொண்டு, பொது இடங்களில் அமர்ந்து உல்லாசமாக மது அருந்துவதாகப் புகார் எழுந்தது.
இதனால், அவ்வழியாகச் சென்றுவரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர் ஆகியோர் அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில், மதுப்பிரியர்கள் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால், பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இது குறித்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் தலைமையிலான தனிப்படை காவலர்கள் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 60 பேரை கைதுசெய்தனர்.
குடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் காவல் துறை சார்பில் அறிவுரை வழங்கி அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆபாச கானா பாடல்: மன்னிப்பு கேட்ட சரவெடி சரண்; கைதாகி விடுவிப்பு