ETV Bharat / state

510 கிலோ கஞ்சா பறிமுதல் - காவலர்களுக்குப் பாராட்டு!

திருவள்ளூர்: டேங்கர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 510 கிலோ கஞ்சாவை மடக்கிப்பிடித்த காவலர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

510 kg of cannabis seized - Praise to the police!

author img

By

Published : Oct 6, 2020, 10:45 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆந்திராவிலிருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் டேங்கர் லாரியில் ரகசிய அறை அமைத்து, தடைசெய்யப்பட்ட கஞ்சாவை கடத்திவருவது தெரியவந்தது. இதனையடுத்து கடத்திவரப்பட்ட 510 கிலோ கஞ்சாவையும் பறிமுதல்செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக சச்சின் நாராயணன், சுந்தர் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவை திருச்சிக்கு கொண்டுசெல்வது தெரியவந்துள்ளது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செங்குன்றம் காவல் நிலையத்தில் பறிமுதல்செய்து வைக்கப்பட்ட கஞ்சாவைப் பார்வையிட்டார்.

லாரியுடன் கஞ்சாவைப் பறிமுதல்செய்த காவலர்களைப் பாராட்டிய காவல் ஆணையர், காவலர்களுக்கு அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் 1,680 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 201 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 368 பேர் கைதுசெய்யப்பட்டும், 67 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டும் உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:வில்லிவாக்கம் வழக்கறிஞர் கொலையில் தொடர்புடைய 8 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.