திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் வண்டலூர்-மீஞ்சூர் சாலையின் அருகில் உள்ள காலி மைதானத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செம்மரக் கட்டைகள் கிடப்பதாக டேங்க் பேக்டரி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர், 500 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல்காரர்கள் மாட்டிக்கொள்ளாமலிருக்க அவற்றை அங்கு வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பொத்தூரில் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 6 பேர் கைது