திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிவந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் பண்டல் பண்டலாக 400 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து காவல் துறையினர் அவற்றைப் பறிமுதல்செய்து வாகனத்தில் வந்த மூன்று பேரை கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் பெயர் விக்னேஷ், அருண்பாண்டி, பாபு என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கஞ்சா எங்கிருந்து கடத்திவரப்பட்டது, யாருக்காக கொண்டுசெல்ல எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ஒடிசாவில் 391 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது!