ETV Bharat / state

திருவள்ளூரில் மேலும் 370 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 8,702ஆக அதிகரிப்பு! - thiruvallur corona list

திருவள்ளூர்: மாவட்டத்தில் புதிதாக 370 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 702ஆக அதிகரித்துள்ளது.

370 new corona cases reported in thiruvallur

author img

By

Published : Jul 19, 2020, 7:58 AM IST

சென்னைக்கு அடுத்தப்படியாக, அதன் அருகாமை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகப்படியாக இருக்கிறது. இருப்பினும், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 18) திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 370 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்த்து 702ஆக உயர்ந்துள்ள. இதில், 5 ஆயிரத்து 282 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154ஆக உள்ளது.

இன்று நள்ளிரவு முதல் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள் நடந்துசென்றுதான் வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் 30 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.