திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி (45). கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேரன் (43), ரவி (41). இவர்கள் மூவரும் ஆந்திரா மாநிலத்தில் மூன்றாயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சி டேங்கர் டிராக்டர் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தனர்.
அப்போது, பொன்பாடி சோதனைச்சாவடி அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில், கள்ளச்சாராயம் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வாகனத்துடன் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிந்து மூவரையும் கைதுசெய்தனர்.
இது குறித்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், மதுபானம், கள்ளச்சாராயம் உள்ளிட்டவை கடத்திவருவதைத் தடுக்க ஆந்திரா மாநிலத்தை ஒட்டிய ஐந்து இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதுவரை 120 வழக்குகள் பதியப்பட்டு 170 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 65 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு அவற்றிலிருந்த ஐந்தாயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்செய்யப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மதுபானக் கடையில் 11 பாட்டில் மதுவைத் திருடியவர் சிக்கினார்!