திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனிநாதன். ஒப்பந்ததரான இவர் தமது மைத்துனருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று (டிச. 03) சென்னைக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து முனிநாதன் பொன்னேரி காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன்பேரில், அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, 2.5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: பைக், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்கள் கைது!