திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று (அக்.3) கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அரசுப்பேருந்தில் காவல் துறையினர் சோதனை செய்தனர். சந்தேகத்திற்கிடமாக பையிலிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதனைக் கடத்தி வந்த கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
விசாரணையில் பிடிபட்ட மாணவர் சென்னை முடிச்சூரைச் சேர்ந்த ரேவன் குமார் (21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். சக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தார் என்பது தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் மாணவரை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது