ETV Bharat / state

’நாங்க ஒன்னும் அதுக்காக வரலையே’.. நெல்லையில் ஓட்டம் பிடித்த பெண்களின் பின்னணி என்ன? - women were gathered under social activist

நெல்லையில் காரணம் தெரியாமல் போராட்டத்திற்கு வந்த பெண்கள் போலீசாரின் நடவடிக்கையைக் கண்டு தெறித்து ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் உண்மையை மறைத்து பொதுமக்களை போராட்டத்திற்கு திரட்டிய சமூக ஆர்வலர்

author img

By

Published : Jun 24, 2023, 6:44 AM IST

நெல்லையில் உண்மையை மறைத்து பொதுமக்களை போராட்டத்திற்கு திரட்டிய சமூக ஆர்வலர்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது ஆளும் கட்சி கவுன்சிலர்களே தொடர்ச்சியாக மாமன்ற கூட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். அதாவது நெல்லை திமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மேயர் மீது குற்றம் சாட்டி வந்தனர். பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக மாஜி மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், சமீபத்தில் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதன் பிறகு மேயர் மீது குற்றம் சாட்டுவதை ஆளும் கட்சி கவுன்சிலர்கள் தவிர்த்துள்ளனர். அதேநேரம், கவுன்சிலரால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மேயரை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் நம்பிக்குமார் என்பவர் நெல்லை மாநகரப் பகுதியில் தொடர்ச்சியாக போஸ்டர் ஒட்டி வருகிறார். அந்த போஸ்டரில் ‘கமிஷன் வாங்கி கல்லா கட்ட துடிக்கும் மேயரை மாற்ற வேண்டும்’ என பரபரப்பு வசனங்களையும் குறிப்பிட்டு இருந்தது மேலும் பதற்றத்தைக் கூட்டியது.

தங்கள் கட்சி கவுன்சிலர்களை சமாளித்த மேயர், அடுத்த கட்டமாக நம்பிக்குமாரை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், மேயரை மாற்றக்கோரி நம்பிக்குமார் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலையிடம் கடந்த வாரம் மனு அளிக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால், போலீசார் அவரது போராட்டத்திற்கு தடை விதித்தனர். இதனையடுத்து, நேற்று மீண்டும் அண்ணா சிலையிடம் மனு அளிக்கப் போவதாக நம்பிக்குமார், 100க்கும் மேற்பட்ட பெண்களை திரட்டிக் கொண்டு, மாநகராட்சி அலுவலகம் வந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அண்ணா சிலையிடம் மனு அளிக்க அனுமதி கிடையாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றோரிடம் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து போலீசாரிடம் நம்பிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார், நம்பிக்குமார் மற்றும் அவருடன் வந்த அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது கத்தி கூச்சலிட்ட நம்பிக்குமார், “பேரறிஞர் அண்ணாவே... ஊழல்வாதி மேயர் மீது நடவடிக்கை எடு, சாலையில் கமிஷன் கேட்பதால் பணிகள் முடங்கி கிடக்கிறது” என்று முழக்கமிட்டார்.

நம்பிக்குமாரைத் தொடர்ந்து, அவருடன் வந்த பெண்களையும் போலீசார் வண்டியில் ஏற்ற முயன்றபோது, வண்டியில் ஏற பயந்து பல பெண்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர். போலீசார் அவர்களை மடக்கி விசாரித்தபோது, “நாங்கள் அண்ணா சிலையிடம் மனு அளிக்க வரவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு மேயரிடம் மனு அளிக்கத்தான் வந்தோம். எங்களிடம் அண்ணா சிலையிடம் மனு அளிக்கும் விவரத்தை சொல்லவில்லை” என்று கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னதாக, சமூக ஆர்வலர் நம்பிக்குமார் பணம் கொடுத்துதான் பொதுமக்களை திரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களிடம் எதற்காக தங்களை அழைத்து வருகிறோம் என்று கூட சொல்லாமல் உண்மையை மறைத்ததன் மூலம் பணம் செலவு செய்து அவர்களை திரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: 'ஆதனின் பொம்மை' நாவலுக்காக பால புரஸ்கார் விருது பெறுகிறார் உதயசங்கர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.