ETV Bharat / state

'முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருக்கிறோம்..!' - அமைச்சர் துரைமுருகன் - முல்லை பெரியாறு

'முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்' என நெல்லையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

’முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருக்கிறோம்..!’ - துரைமுருகன்

author img

By

Published : Sep 2, 2022, 5:00 PM IST

திருநெல்வேலி: இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நெல்லை மாவட்டம் வந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம்(செப்.1) நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நீர் வளத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின் நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தமிழ்நாட்டின் முதல் நதிநீர் இணைப்புத்திட்டமான தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத்திட்டம் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், திடியூர் பகுதியில் நடந்து வரும் நதி நீர் இணைப்புத்திட்டப்பணிகள் மற்றும் பச்சையாறு அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த அவர், ''10 ஆண்டுகள் எந்த அலுவலர்களும் வேலை செய்யவில்லை. அலுவலர்கள் அனைவருக்கும் பல வேலைகள் மறந்துவிட்டன.

அமைச்சர் பதவியை ஏற்றபின்னர் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பணி தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கர்மேனியாறு இணைப்புத் திட்டம், நான் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்தது. அதை நானே திறக்கவேண்டும் என விட்டுவிட்டார்கள் போல” எனத் தெரிவித்தார்.

மேலும், ''வரும் அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்புத்திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதி நீர் இணைப்புத்திட்டம் முதல் இரண்டு பகுதிகள் 100% முடிந்துள்ளன. 3ஆம் பகுதியாக 99% பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. 4ஆம் பகுதி 58% பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

தாமிரபரணி நதி நீர் இணைப்புத்திட்டம் மொத்தமாக மார்ச் 2023இல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம். நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்குத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்...வைகோ உருக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.