தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டிவருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணைகளில் கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. சேர்வலாறு அணை 47.47 அடியாகவும், மணிமுத்தாறு அணை 68 அடியாகவும் குறைந்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி மக்களின் மிக முக்கிய நீர் ஆதாரமான பாபநாசம் அணையில் நீரின் அளவு 9 அடியாக குறைந்துள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.