திருநெல்வேலி: வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது பாளையங்கோட்டை காவல் துறையினர், ஆள்கடத்தல் புகார் தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெறுவதற்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், வைகுண்டராஜன். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வைகுண்டராஜனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், தினமும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதித்தது.
செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்டராஜன்
இதையொட்டி வைகுண்டராஜன் இன்று (ஆக.22) காலை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்து நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி கையெழுத்திட்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் வைகுண்டராஜனிடம், காவல் துறையினர் போடப்பட்ட வழக்குப்பதிவு குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் கூறியதாவது, “தன் மீது போடப்பட்ட வழக்கில் அலுவலர்கள் தவறு செய்தால் இந்திய சட்டத்தின்படி நீதிமன்றத்தை நாடுவேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கையூட்டுக் கொடுத்த வழக்கு: வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை!