ETV Bharat / state

'நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு' - திருமாவளவன்

நெல்லை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

vck-dmk
author img

By

Published : Sep 5, 2019, 1:45 PM IST

Updated : Sep 5, 2019, 3:23 PM IST

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 148ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெறச் செய்ய வைப்பது தங்களுடைய தலையாய கடமை எனவும் தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தல்களில் திமுகவை மக்கள் ஆதரித்துள்ளது போல வரும் தேர்தல்களிலும் ஆதரவளிப்பார்கள் என்றார். மேலும், வரும் தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

vck-dmk
திமுக-விசிக கூட்டணி

தொழில் துறையில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், தொழில் துறையில் இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களால் எந்த பலனுமில்லை என்றும் கூறினார். முதலமைச்சரின் வெளிநாடு பயணம் மூலம் கிடைக்கும் முதலீட்டால் தமிழ்நாடு பயன்பெறும் என்றால் அதனை வரவேற்பது தங்களது கடமை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Intro:நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் நெல்லையில் தெரிவித்தார்.Body:நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் நெல்லையில் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகியும் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 148 ஆவது பிறந்த நாள் தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது நெல்லை டவுன் பகுதியில் வ உ சி மணி மண்டபம் அமைந்துள்ளது அங்குள்ள அவரின் திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் நாங்குநேரி விக்ரவாண்டி சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கப்போவதாகவும்,
இரண்டு தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்யவைப்பது வி.சி.கவின் தலையாய கடமையாகும் என்றார்,
மேலும் நடந்து முடிந்த தேர்தல்களில் திமுகவை மக்கள் ஆதரித்துள்ளனர்.அதேபோல வரும் தேர்தலும் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்,
தொழில்துறையில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் தொழில்துறையில் இதுவரை போடபட்ட ஒப்பந்தங்களால் எந்த பலனுமில்லை. முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம் கிடைக்கும் முதலீட்டால் தமிழகத்திற்கு பயன் அளித்தால் அதனை வரவேற்ப்பது எங்களது கடமை என்றும்
தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Sep 5, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.