ETV Bharat / state

திமுகவுடன் கூட்டணி; சீட்டு ரொம்ப குறைவு தான் - தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ! - மதிமுக திமுகவுடன் கூட்டாணி‘

திருநெல்வேலி: திமுக தலைமையில் மதிமுக போட்டியிடும் என்றும் கூட்டணியில் சீட் குறைவாக கூட கிடைக்கலாம் அதற்காக வருத்தப்பட கூடாது என்றும் தொண்டர்களுக்கு வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : Feb 13, 2021, 7:49 AM IST

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக - திமுக உடன் இணைந்து போட்டியிடும் என்று பேசப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இதனை உறுதிசெய்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியில் எத்தனை சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு சிறிய கட்சிகள் மத்தியில் ஏற்படத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியில் நமக்கு மிகவும் குறைவான சீட் கொடுக்கலாம். அதற்காக வருத்தப்படாதீர்கள் என்று வைகோ பேசியிருப்பது தொண்டர்களுக்கு ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார்.

தொண்டர்கள் மத்தியில் வைகோ உரை

இதனைத்தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய வைகோ, "7 பேர் விடுதலை பற்றி இன்று எல்லோரும் பேசுகிறார்கள். 7 பேர் விடுதலைக்காக 78 லட்சம் ரூபாய் செலவு செய்த ஒரே கட்சி மதிமுக தான். மதிமுக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்காவிட்டால் 7 பேர் கழுத்தில் தூக்கு கயிறு ஏறியிருக்கும்.

தேர்தலில் எத்தனை இடங்களில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இல்லை. எத்தனை சீட்டு கிடைக்கும் என்றும் தெரியாது. மிகக்குறைந்த சீட்டு கூட கிடைக்கலாம். இதெல்லாம் தெரிந்தும் கூட இந்த இயக்கத்திற்காக பாடுபடுகிறீர்கள். பிற கட்சிகள் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு மத்தியில் நாம் போராடி காட்டுவோம். 29 ஆண்டுகள் திமுகவில் பாடுபட்டேன். பின்னர் 27 ஆண்டுகள் மதிமுகவில் பாடுபட்டு வருகிறேன்.

இந்த தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடுவோம் என்று முடிவு செய்துவிட்டோம். இடங்கள் பிரச்னை அல்ல; சீட்டு ரொம்ப குறைவாக கூட கொடுக்கலாம் அதுக்காக வருத்தப்பட கூடாது" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.