ETV Bharat / state

தொடர் மழையால் நெல்லை அணைகளின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

author img

By

Published : May 27, 2021, 8:27 PM IST

திருநெல்வேலி: தொடர்மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ஒன்பது அடியாக உயர்ந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கோடையில் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வங்கக் கடலில் உருவான புயல் 'யாஸ்' காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (மே. 25) இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக தற்போது அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

மழை அளவைப் பொறுத்தவரை இன்று (மே.27) காலை நிலவரப்படி அதிகபட்சம் பாபநாசம் மலைப்பகுதியில் 41 மில்லி மீட்டர், அம்பாசமுத்திரம் பகுதியில் 27 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 23 மில்லி மீட்டர், மணிமுத்தாறில் 20 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 14 .40 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 11 மில்லி மீட்டர், திருநெல்வேலி நகரில் 6.40 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் சராசரியாக மொத்தம் 149. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

குறிப்பாக மலைப் பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலியில் கோடை காலமான மே மாதம் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீர்மட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 10 அடி அதிகரித்துள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி 119 அடியாக இருந்தது. இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் நீர் மட்டம் 10 அடி உயர்ந்து தற்போது 129 அடியாக அதிகரித்துள்ளது.

அணை நிரம்ப இன்னும் 14 அடி மட்டுமே உள்ள நிலையில், தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்வதால் இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம், மேலும் ஐந்து அடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாபநாசம் அணை கோடை காலத்தில் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள பிற அணைகளான சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 84 அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் நான்கு அடி உயர்ந்து 88ஆக அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் ஐந்து அடி அதிகரித்துள்ளது.

புயலுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் கத்திரி வெயிலின்போது தினமும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் அடுத்தடுத்து பெய்துவரும் தொடர் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வரும் ஜூன் மாதம் முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. அந்த சமயத்தில் அதிக மழை கிடைக்கும்பட்சத்தில் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் குறையாமல் இருக்கும் என்பதால் விவசாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'விரைவில் தென்காசியில் மருத்துவக் கல்லூரி' அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.