திருநெல்வேலி: டவுன் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் (டிசம்பர் 17) கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு மாணவர்கள் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் தரத்தை ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டடங்களை ஆய்வுசெய்ய 16 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் பழுதடைந்த கட்டடங்களை ஆய்வுசெய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் அறிக்கையினைச் சமர்ப்பித்தது. அதன்பேரில் மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள 90 பள்ளி கட்டடங்களை மூன்று நாள்களுக்குள் இடிக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதன்முதலாக பாடநூலில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள்