ETV Bharat / state

கட்சிக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ : திமுகவில் உச்சக்கட்டத்தில் உள்கட்சி பூசல்..! - திமுகவில் உச்சக்கட்டத்தில் உள்கட்சிப் பூசல்

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 3ஆவது வார்டுக்கு திமுக சார்பில் பூ. சுப்பிரமணியன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக அதே 3ஆவது வார்டுக்கு, திமுக வர்த்தக அணி செயலாளர் மைதீன் மல்கரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

கட்சிக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ : திமுகவில் உச்சக்கட்டத்தில் உள்கட்சிப் பூசல்..!

author img

By

Published : Feb 5, 2022, 1:26 PM IST

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 3 நகராட்சிகள்,17 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

நேற்றுவரை மாநகராட்சியின் 55 வார்டுகளுக்கு 215 வேட்பு மனுக்களும், மூன்று நகராட்சிகளில் உள்ள 69 வார்டுகளுக்கு 188 பேரும், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 825 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 3ஆவது வார்டுக்கு திமுக சார்பில் பூ. சுப்பிரமணியன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே மாநகராட்சியின் தச்சை பகுதி மண்டல சேர்மனாக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார். யாரும் எதிர்பாராத விதமாக அதே 3ஆவது வார்டுக்கு, திமுக வர்த்தக அணி செயலாளர் மைதீன் மல்கர் பிப்.4இல் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கடைசி நேரத்தில் 3ஆவது வார்டுக்கு முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ( 2006 - 2011 ) மாலை ராஜா தன் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

இப்படி வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளில் ஒரே வார்டுக்கு ஒரே கட்சியை சேர்ந்த 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சியால் அறிவிக்கப்பட்ட ஒரு நபர் இருக்கும்போது நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? என்று கேட்டதற்கு," கட்சி மீது முழு நம்பிக்கை உள்ளது.

எனக்கு அதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்" என்று மாலைராஜா தெரிவித்தார். ஒரே வார்டுக்கு மூன்று பேர் போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, வேட்புமனு பரிசீலனை முடிந்து வேட்பாளரை அறிவிக்கும் போது உங்களுக்கு இதற்கான விடை தெரியும் என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.

திமுகவில் உள்கட்சிப் பூசல்

இதன் மூலம் நெல்லை மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா அழகிரி ஆதரவாளர் ஆவார். எனவே கட்சி தலைமை அறிவித்த உத்தரவுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக கட்சி பெயரை பயன்படுத்தி வேட்புமனு வழங்கியுள்ளார். எனவே அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா ?

அல்லது அவருக்கு ஆதரவாக இருந்து பிற வேட்பாளர்களின் மனுவை வாபஸ் வாங்க செய்யுமா..? என்ற எதிர்ப்பார்ப்பு நெல்லை மாவட்ட திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மாலை ராஜா ஏற்கனவே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏ சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் திமுக தலைமை அந்தத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற கனவில் மாலைராஜா இருந்து வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

எனவே கட்சி தலைமையை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது மேயர் ஆகிவிடவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தற்போது அவர் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.