ETV Bharat / state

15 நாள்களாக பற்றி எரியும் தீ: கரோனாவோடு குப்பைகளால் அழியும் திருநெல்வேலி!

திருநெல்வேலி: கரோனாவுடன் போராட வேண்டிய நேரத்தில், ராமையன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் வைக்கப்படும் தீயினால், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

fire
fire
author img

By

Published : Jul 26, 2020, 6:28 AM IST

Updated : Jul 27, 2020, 11:57 AM IST

திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வாவும், வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறும் தான். தமிழ்நாடு வரலாறு, இலக்கியத்தோடு தொடர்புடைய இந்த நதி மக்களின் பண்பாட்டு வகையில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. காலங்கள் போற்றும் தாமிரபரணியில் ரத்த வாடைகளும் வீசும், சந்தேக கொலைகளும், அரசியல் படுகொலைகளும் நிகழ்ந்திருப்பதை 20ஆம் நூற்றாண்டில் வாழும் எவராலும் மறக்கமுடியாது. திருநெல்வேலியின் வற்றாத ஜீவநதியாக இருக்கும் தாமிரபரணி ஆற்றால், பசுமையான சூழல் நிலவும்.

எங்கு பார்த்தாலும் பச்சை புல்வெளி போத்திய விவசாய நிலங்களில் இருந்து வரும் குளிர் காற்று இதயத்தை நனைத்து செல்லும். தாமிரபரணி ஆற்றில் உருண்டோடும் தண்ணீரின் சத்தங்கள் காற்றின் வழியே மெல்லிசை பாடும். திருநெல்வேலி மக்களின் வாழ்வில் முக்கிய தடம் பதித்துள்ள தாமிரபரணி ஆற்றில் தற்போது, மனித மலங்களின் வாடையும், மாமிச துர்நாற்றங்களும் வீசுகின்றன. குப்பையை சுமந்து செல்லும் கழிவோடையாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது.

நாகரிக வளர்ச்சியால், குப்பைகளின் நகரமாக திருநெல்வேலி காட்சியளிக்கிறது. குளம், குட்டை ஆற்றுப்பகுதிகளில் மலைபோல் குவியல் நிறைந்த குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீர் வளமும், விவசாய வளமும் பொய்த்து வருகிறது. பல லட்சம் மக்கள் கட்டிக்காத்த இந்த மண்ணை வளர்ச்சி என்ற பெயரில் கூறுபோட்டு விற்பனை செய்துக்கொண்டிருக்கிறோம். உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாய் விளங்குவது, மலைகள், காடுகள், செழிப்பான ஆறுகள், வளி, காற்று இவையனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து மனித இனத்தை காக்க பின்னி பிணைந்து கிடக்கிறது. உயிர்ப்போடு இருக்கும் இந்த இயற்கையை மனிதர்களாகிய நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் சபக்குழிதான் என சுற்றுச் சூழலியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மட்டும் நாள்தோறும் சுமார் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், நெல்லையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ராமையன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் திடக்கழிவுகளை மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் முறைப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

தற்போது பெரும்பாலான மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படாததால் மக்களிடம் சேகரிக்கப்படும் அனைத்து விதமான குப்பைகளும் ராமயன்பட்டி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அதிலும், நெகிழி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி கழிவுகள் பல்வேறு விலங்கு கழிவுகள் நகரப்பகுதியில் சேகரிக்கப்பட்டு இங்கு வந்து கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பை கிடங்கு தொடங்கப்பட்ட காலத்தில், ராமையன்பட்டி பகுதியில் குறைந்த அளவே மக்கள்தொகை இருந்து வந்தது.

15 நாள்களாக பற்றி எரியும் தீ

தற்போது, சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் குப்பைக் கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அடிக்கடி இந்தக் குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்தினால் ஏற்படும் புகைமூட்டம், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், தொற்று நோய் பரவக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத்துறையினரால் அணைக்கப்படும் நெருப்பு மக்களின் வாழ்வில் அணையா புகையாக கனலாக எரிந்து கிடக்கிறது.

இதனிடையே பல திடுக்கிடும் குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்துகிறது. குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்து, திட்டமிட்டே மாநகராட்சி அலுவலர்களால் அடிக்கடி வைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் குப்பைக் கிடங்கிற்கு, கொண்டுச் செல்லக் கூடாது. எனவே, மத்திய அரசு அலுவலர்கள் ஆய்விற்கு வந்தால் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் மாநகராட்சியினரே குப்பைக் கிடங்கில் தீ வைத்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்ப பாண்டியன் கூறியதாவது, "ராமையன்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் அவ்வப்போது குப்பைகளை தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதனால், கண் எரிச்சல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோயால் அவதிப்படுகிறோம். இங்கு கடந்த 15 நாள்களாக தீப்பிடித்து எரிகிறது. கரோனாவால் மக்கள் பசி பட்டினியுடன் வறுமையில் வாடும் இந்தச் சூழலில், குப்பைக் கிடங்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் என பல்வேறு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இங்கே வசிப்பதா, ஊரை விட்டு காலி செய்வதா என்பதை மாநகராட்சி தான் கூற வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.

அதபோன்று, கணேசமூர்த்தி கூறியதாவது, "இந்தக் குப்பைக் கிடங்கால், இப்பகுதியை சுற்றியுள்ள 13 குளங்கள் நாசமாக்கி விவசாயத்தை கெடுத்து விட்டது. ஆண்டுக்கு ஒரு முறை அவர்களே குப்பையை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் பாதிப்பு அச்சத்தை தருகிறது. இங்கு குப்பைக் கொட்டுவதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து இங்கே குப்பைக் கொட்டுவதை நிறுத்த வேண்டும்" என கோரினார்.

அப்பகுதியைச் சேர்ந்த உசேன் கூறியதாவது, "இறந்த நாய், பன்றிகளை சிட்டியிலிருந்து கொண்டு வந்து இங்கே கொட்டுகின்றனர். அதனால் இங்கிருக்கும் மக்கள் குடியிருக்க முடியவில்லை குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இரவில் தூக்கமில்லாமல் மக்கள் மிகவும் அவதியடைகின்றனர். கரோனாவும் வந்து எங்களை சோதிக்கிறது என்றார்.

இந்தக் குப்பைக் கிடங்கினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்தக் குப்பை கிடங்கு பல ஆண்டுகளாக உள்ளது. திடீரென மாற்ற முடியாது, பொதுமக்கள் புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும் - ஸ்டாலின்

Last Updated : Jul 27, 2020, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.