ETV Bharat / state

'ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'

author img

By

Published : Oct 11, 2019, 9:21 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மறுநாளே தற்போதுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மூன்று நாள்களாக பரப்புரை மேற்கொண்டுவருகிறார். மூன்றாம் நாளான நேற்று நாங்குநேரி, பேரூர், பரப்பாடி, இட்டமொழி, விஜய நாராயணபுரம், முனைஞ்சிப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "ராணுவவீரர் இந்தியாவை காப்பாற்ற ராணுவத்தில் பணிபுரிவதுபோல், நாங்குநேரி தொகுதி மக்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் செயலாற்றுவார்.

முதலமைச்சர்உள்ளிட்ட 15 பேர் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டனர். இதேபோல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015ஆம் ஆண்டு போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது

அதேபோல் 2017ஆம் ஆண்டு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 3.4 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற்றது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் வெறும் 14 ஆயிரத்து 153 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு பெறப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த முதலீடுகளை கொண்டு சுமார் 10லட்சம் பேருக்கு வேலை அமைத்து கொடுப்போம் என்றனர். ஆனால் ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பை பெற்று தரவில்லை.

மேலும் கட் அவுட் கலாசாரம் தேவையில்லை என்பது திமுக கொள்கை, பேனர் வைக்கட்டும் வேண்டாம் என சொல்லவில்லை அனுமதி பெற்று வைக்கட்டும். அதிமுகவை சேர்ந்த யாரும் சுபஸ்ரீ வீட்டிற்கு சென்று இதுவரை ஆறுதல் சொல்லவில்லை? தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாநிலையே உள்ளது.

குறிப்பாக ஆட்சியை காப்பாற்றும் சூழ்நிலையில்தான் அதிமுகவினர் இருக்கிறார்கள். முதலமைச்சர், அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்த அனைத்து கோப்புகளும், மத்திய அரசிடம் உள்ளது. இதனால் ஆட்சி மாறும் மறுநாளே அவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி" என்றார்.

இதையும் படிங்க:ஆட்சி முடிந்ததும் அதிமுக அமைச்சர்களுக்கு காவி டவுசர்’

Intro:Body:தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் மறுநாளே முதலமைச்சர் அமைச்சர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக பிரச்சாரம் செய்தார் இன்று தொகுதிக்குட்பட்ட நாங்குநேரி பேரூர் பரப்பாடி, இட்டமொழி, விஜய நாராயணபுரம், முனைஞ்சிப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளர் ராணுவவீரர் இந்தியாவை காப்பாற்ற ராணுவத்தில் பணி புரிந்தது போல் நாங்குநேரி தொகுதி மக்களுக்கும் செயலாற்றுவார் என்று தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில்,

அதிமுக ஆட்சி பெயருக்கு இருக்கிறது
எடப்பாடி தலைமையிலான ஆட்சி அல்ல மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது
கைகட்டி வாய் பொத்தி மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஆட்சியாக உள்ளது.

முதல்வர் உள்ளிட்ட 15 பேர் முதலீட்டுக்காக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக வெளிநாடு பயணம் மேற் கொண்டனர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது
2015ம் ஆண்டு - 98 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 2.42 லட்சம் கோடி முதலீடு என கூறப்பட்டது சொன்னார்
2017ல் போடப்பட்ட - புரிந்துணர்வு ஒப்பந்தம் 3.4 லட்சம் கோடி முதலீடு என தகவல் சொன்னார்கள்
அறப்போர் இயக்கம் ஆர்டிஐ தகவலின் படி 14153 கோடி மட்டுமே முதலீடு வந்துள்ளது என தகவல் கிடைத்துள் அது
10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என அறிவித்த தீங்கள் 1000 பேருக்கு ஆவது வேலை வாய்ப்பு வழங்கினீர்களா ஸ்டாலின் கேள்வி எழுப்பினார் .

கட் அவுட் கலாச்சாரம் தேவையில்லை என்பது திமுக கொள்கை
பேனர் வைக்கட்டும் வேண்டாம் என சொல்லவில்லை அனுமதி பெற்று வைக்கட்டும் அதிமுகவை சேர்ந்த யாரும் சென்று சுபஸ்ரீ வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்னார்களா தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா நிலை தொடர்கிறது செயின் பறிப்பு பாலி யல் பலத்காரம் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே நிலைதான் தொடர்கிறது ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களை சந்திக்கும் இயக்கும் திமுக மக்களை பற்றிகவலைப்படும் கட்சி திமுக.

ஆட்சியை காப்பாற்றும் சூழ்நிலையில் தான் அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு ள்ளனர் இவர்களது ஊழல் தொடர்பான அனைத்து கோப்பு களும் மத்திய அரசிடம் உள்ளது விரைவில் ஆட்சி மாறும் மறுநாளே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள் என பேசினார். மேலும் நாங்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.