ETV Bharat / state

நெல்லை நீதிமன்ற வளாகத்துக்குள் தீக்குளிக்க முயன்ற தம்பதி... வழக்கில் தீர்ப்பு வர தாமதமாவதால் இந்த விபரீத முடிவு!

couple tried to set fire inside the Thirunelveli court premises: இழப்பீடு வழக்கில் தீர்ப்பு வர தாமதமாவதால், திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்துக்குள் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை நீதிமன்ற வளாகம்
நெல்லை நீதிமன்ற வளாகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 6:52 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வீராணம் பகுதியை சார்ந்தவர் தமிழ்வாணன் (வயது 37). இவரது மனைவி மகேஷ் (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பணியில் இருந்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது உடலில் ஆசிட் பட்டதில், அவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை அடுத்து இந்த விபத்து தொடர்பாக தனக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கின் விசாரணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (டிச.11) வாய்தா அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தமிழ்வாணன், மகேஷ் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த நிலையில் வழக்கில் இன்றும் தீர்ப்பு கிடைக்காததால், மனம் உடைந்த தமிழ்வாணன் மற்றும் மகேஷ் தம்பதி, குழந்தைகளை அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு கையில் கொண்டு வந்த நான்கு லிட்டர் பெட்ரோலை இருவரும் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற உள்ளனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள், பெட்ரோல் பாட்டில்களை அவர்களிடம் இருந்து பிடுங்கியதோடு அவர்களை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் சிகிச்சைக்காக இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவா சுற்றுலா செல்லும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் - சிறுசேமிப்பின் மூலம் சாதித்த நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.