ETV Bharat / state

நெல்லை காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கு: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

author img

By

Published : Feb 8, 2021, 9:49 PM IST

திருநெல்வேலி: தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் நான்கு பேர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

4 பேர் நீதிமன்றத்தில் சரண்
4 பேர் நீதிமன்றத்தில் சரண்

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.7) பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவரான கண்ணபிரான் நேற்று (பிப்.7) தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போதுஅவரை பின்தொடர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், காவல் நிலையம் முன்பு இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதேபோல் காவல் நிலையம் அருகில் மற்றொரு பகுதியில் இரண்டு குண்டுகளை வீசிச் சென்றனர்.

ஆளில்லாத இடத்தில் குண்டுகள் விழுந்ததால் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் தான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கண்ணபிரான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இன்று கண்ணபிரான் தனது ஆதரவாளர்களுடன் நூதன முறையில் கைகளை கயிறால் கட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (பிப்.8) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் பேரூரணியைச் சேர்ந்த விக்ரம், தாழையூத்தைச் சேர்ந்த பிரவின்ராஜ், பேட்டையைச் சேர்ந்த அழகர் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராஜசேகரன் ஆகிய நான்கு பேரும் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து காவலர்கள் நான்கு பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் கூறுகையில், "இந்த வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ஒரு நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சரணடைந்த 4 பேரையும் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்" என்றார்.

தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுசிலா 15 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை கலைக்க கோரிய மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.