ETV Bharat / state

என்னைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்கும் - எம்எல்ஏ பழனி நாடார் - Tenkasi Re counting result

தென்காசி தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையில் 373 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீண்டும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

என்னைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்கும் - எம்எல்ஏ பழனி நாடார்

author img

By

Published : Jul 14, 2023, 8:04 AM IST

தென்காசியை மீண்டும் தக்க வைத்தது, அதை திமுக கூட்டணி பட்டாசு வெடித்து தொண்டர்கள் ஆராவாரம்

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியிலிருந்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதேநேரம், தென்காசி தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி, அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் தென்காசி தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேற்று தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 2021ஆம் ஆண்டு பதிவான தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. மேலும், நேற்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய தபால் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் தாமதமாக 10.20 மணிக்கு தொடங்கியது.

தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா முன்னிலையில் ஓட்டு எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் ராஜ் பாண்டியன் படிவம் 13 சி-ஐக் காட்ட வேண்டும் என்பது உள்பட சில விஷயங்களில் ஆட்சேபனை கூறியதால் வாக்கு எண்ணிக்கை இரண்டு முறை நிறுத்தப்பட்டது.

பின்னர், மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான துரை ரவிச்சந்திரன் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணி வரை வாக்குச் சீட்டுகள் பிரித்து வைக்கும் பணிகளை நடைபெற்றது.

அதன் பிறகு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது. கிட்டத்தட்ட 10 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நீடித்த நிலையில், இரவு 7.30 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று 373 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 14,108 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் 88,945 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 89,315 வாக்குகளும் பெற்றிருந்தனர். அப்போது நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும், கடந்த 2021இல் நடைபெற்ற தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 1,609 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 674 தபால் வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகத்தான் அதிமுக வேட்பாளர் நீதிமன்றம் சென்றார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தபால் மறு வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 1,642 வாக்குகள் பெற்றார். அதாவது கடந்த முறையை விட 33 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.

அதேபோல், அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் கடந்த எண்ணிக்கையின் போது 674 தபால் வாக்குகள் பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் கூடுதலாக 30 ஓட்டுகள் வாங்கி மொத்தம் 704 வாக்குகள் பெற்றார். அதாவது படிவம் 13 சியில் கிரேடு அதிகாரிகளின் கையெழுத்து இல்லாததால் கடந்த முறை 82 தபால் வாக்குச்சீட்டு கவர்கள் பிரிக்கப்படாமல் இருந்தன.

அதேநேரம், அதிமுக வேட்பாளரின் கோரிக்கையை ஏற்று இந்த முறை நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் அந்த 82 வாக்குகளும் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் தான் இருவருக்கும் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இதன்படி பார்த்தால் மொத்தமாக காங்கிரஸ் வேட்பாளர் 89,348 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 88,975 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் பழனி நாடார் 373 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரி லாவண்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எனவே, தென்காசி தொகுதியை திமுக கூட்டணி தக்க வைத்துள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமோடு ஆடி பாடி தங்கள் வேட்பாளர் வெற்றியை கொண்டாடினர்.

இது குறித்து தேர்தல் அதிகாரி லாவண்யா கூறும்போது, "கடந்த முறை படிவம் 13 சி-இல் கிரேடு அதிகாரி கையெழுத்து இல்லாததால் கடந்த முறை 82 வாக்குச்சீட்டு கவர்கள் பிரிக்கப்படாமல் இருந்தன. கையெழுத்து இல்லாவிட்டாலும் அவற்றை எண்ணலாம் என்பதால், இந்த முறை 82 ஓட்டுகளும் பிரித்து எண்ணப்பட்டதில் காங்கிரஸ் 36 ஓட்டுகளும், அதிமுக 31 ஓட்டுகளும் பெற்றன" என தெரிவித்தார்.

இது குறித்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் கூறும்போது, "இந்த மறு வாக்கு எண்ணிக்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி. எனக்கு கிடைத்த இந்த நீதியைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைத்து அவர் நாட்டின் பிரதமர் ஆவார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Tenkasi Recounting: செல்லாமல் போன தபால் வாக்குகள்.. ஆனாலும் தென்காசியை தக்க வைத்த பழனி நாடார்.. மறுவாக்கு எண்ணிக்கையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.