ETV Bharat / state

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி (Survey of aquatic birds in irrigation ponds) தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 10:55 PM IST

13வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆரம்பம்

நெல்லை: தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி (Survey of aquatic birds in irrigation ponds) தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் 200 பேர் பங்கேற்று 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் இன்று (ஜன.28) தொடங்கின.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, வனத்துறை மற்றும் நம் தாமிரபரணி இயக்கம் சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் தாமிரபரணி நதி கால்வாய் பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 13 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 200 பேர் பங்கேற்று 7 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம் , கால்தடம் , கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் உள்ள குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று அதிகாலை முதல் தொடங்கப்பட்டு பறவைகளை தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கங்கைகொண்டான் பெரிய குளம், வேய்ந்தான் குளம், நயினார்குளம், மானூர் பெரியகுளம், அரியநாயகிபுரம் குளம் திருப்புடைமருதூர் உள்ளிட்ட நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கும் 60 குளங்கள் 5 நீர் தேக்கங்களில் இன்றும் நாளையும் இந்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.

இதுகுறித்து தாமிரபரணி நீர்வாழ் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் குறைவாக பதிவாகியுள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டிய பெரும்பாலன குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. கடந்த ஆண்டு கணக்கெடுப்பை விட இந்த ஆண்டு குளங்கள் வறண்டு உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இதில் குறிப்பாக, கடந்த ஆண்டு நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான் ஆகிய 36 வகை பறவைகள், தாமிரபரணி பாசன குளங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 60 குளங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அனைத்து குளங்களிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால் பறவைகள் ஓரிடம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தண்ணீர் பெருகி இருக்கும் குளங்கள் மட்டுமல்லாது வறண்டு காணப்படும் குளங்களிலும் பறவைகளின் நிலை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பறவைகள் கணக்கெடுப்பில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.