நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அயோத்தி தீர்ப்பு வெளிவரும் நிலையில், பதட்டமான பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். மதத் தலைவர்களை அழைத்து அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். சமூகவலைதளங்கள் மூலமாகவும், என்னுடைய தொலைபேசி வாயிலாகவும் மக்கள் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'என்னப் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறதா' - ருசியைத் தூண்டும் புதுக்கோட்டை முட்டை மாஸ்!