ETV Bharat / state

Nainar Balaji: திமுக அரசு பாஜக எம்எல்ஏ மகன் மீது குறி வைக்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! - நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகனை குறிவைத்து அவரது பத்திரப் பதிவை நிறுத்த திமுக அரசு காரணமா? என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 21, 2023, 8:42 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அக்கட்சியில் மாநில துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் நயினார் பாலாஜிக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாஜக கட்சியில் இளைஞரணி மாநில துணைத் தலைவர் பொறுப்பை பெற்றுத்தந்தார். இந்த நிலையில், பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள 13 ஏக்கர் இடத்தினை இளையராஜா என்பவரிடமிருந்து கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார்.

மோசடியான பத்திரப்பதிவு: இதற்கான பத்திரப்பதிவு, ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போதைய ராதாபுரம் சார்பதிவாளர் சரவண மாரியப்பன் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த கிரைய ஒப்பந்த பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக சென்னையைச் சேர்ந்த 'அறப்போர் இயக்கம்' (Arappor Iyakkam) சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டியது. இதற்கிடையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது நயினார் பாலாஜி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

புகாரளித்த 'அறப்போர் இயக்கம்': இந்த நிலையில் நெல்லை மண்டல பத்திரப்பதிவு துறை டிஐஜி மோசடி ஆவணங்கள் மூலம் நயினார் பாலாஜி கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரூ.100 கோடி மதிப்பிலான அந்தப் பதிவை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது நயினார் பாலாஜி வாங்கிய அந்த இடம் ஏற்கனவே பல சர்ச்சைக்குள்ளான இடமாக இருக்கிறது. பலர் இந்த இடத்துக்கு உரிமை கோரினர். 2006-ல் சரஸ்வதி என்பவரின் பெயரில் அந்த இடத்துக்கான பட்டா இருந்துள்ளது. அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்பவருக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வில்லங்கமான சொத்துக்கு பத்திரப்பதிவு: பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தைப் பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். தற்போது வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

இதுபோன்ற சூழலில் தான், இந்த 1.3 ஏக்கர் நிலத்தை சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இளையராஜா என்பவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை கடந்த 2022ஆம் வருடம் ஜூலை 23ஆம் பதிவு செய்துள்ளனர்.

யார் இந்த இளையராஜா?: மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பிரபல நில விற்பனை ஏஜெண்டாக இருந்து வருகிறார். மதுரை மட்டுமில்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இவர் பல்வேறு முக்கிய பிரபலங்களுக்கு நிலங்களை வாங்கி கொடுக்கும் வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு (Madurai Meenakshi Amman temple Lands) சொந்தமான இடத்தை இளையராஜா மோசடியாக விற்றுக் கொடுத்ததாக ஒரு புகார் உள்ளது. இதுபோன்ற நிலையில் தான், விருகம்பாக்கம் இடத்தை பார்த்த நயினார் பாலாஜி அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். எனவே, அவர் இளையராஜாவின் உதவியை நாடியுள்ளார். அதன் பெயரில் தான் இளையராஜா விருகம்பாக்கம் இடத்தை நயினார் பாலாஜிக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுக்க உதவியுள்ளார்.

சென்னை நிலத்துக்கு நெல்லையில் பதிவு செய்ய முடியுமா?: பத்திரப்பதிவுத்துறை சட்ட விதிப்படி ஒரு நபர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சொத்து வாங்க முடியும். ஆனால், பத்திரப் பதிவைப் பொறுத்தவரை சொத்து உள்ள மாவட்டத்தை விட்டு, பிற மாவட்டத்தில் பதிவு செய்யும்போது பதிவு செய்யும் மாவட்டத்தில் அந்த நபருக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். அந்த வகையில், நயினார் பாலாஜி சென்னையில் இடம் வாங்கியிருந்தாலும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது.

விதிமீறல்கள் எப்படி நடந்தது?: எனவே, இந்த விவகாரத்தில் பத்திரப் பதிவில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. அதேசமயம் இடம் தான் பிரச்னையில் உள்ளது. சட்ட விதிப்படி இதுபோன்று வில்லங்கமும் நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளபோது சென்னையில் அவரால் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. வழக்கமாக, இதுபோன்ற முக்கிய பிரமுகர்கள் வில்லங்கமான இடங்களை பத்திரப் பதிவு செய்ய முடியாவிட்டால் தங்களுக்கு சாதகமாக செயல்படும் பிற சார்பதிவாளர் அலுவலகங்களை நாடுவது வழக்கம்.

பின்னர் சார்பதிவாளர்களை புரோக்கர்களை மூலம் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து பின்னர், சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் அப்பிரமுகரிடம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட இடத்தில் மற்றொரு இடத்தை வாங்கும்படி கூறுவர். இதைத்தொடர்ந்து, நயினார் பாலாஜி விருகம்பாக்கம் இடத்தை பத்திர பதிவு செய்யும்போது ராதாபுரம் பகுதியில் உள்ள மற்ற ஒரு இடத்தையும் சேர்த்து பத்திரப்பதிவு செய்துள்ளார் இங்குதான் விதிமீறல்கள் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

நிலம் யாருடையது?: அதாவது இளையராஜா, 'நான் தான் இந்த இடத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜெண்ட்' என்றும் 'இந்த நிலம் குலாப்தாஸ் நாராயணன் தாஸ் என்பவரின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது' என்றும் கூறி 1.3 ஏக்கர் நிலத்தை நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளனர் முக்கியமாக குலாப்தாஸ் நாராயணன் மகாராஷ்டிராவில் 1946 ஆம் ஆண்டு இறந்ததாக இளையராஜா ஒரு இறப்பு சான்றிதழை இணைத்துள்ளார் அதேசமயம் இதே குலாப்தாஸ் நாராயணன் 1944 ஆம் ஆண்டு சென்னையில் இருந்ததாக மாநகராட்சி பதிவேட்டில் சான்று உள்ளது இதன் மூலம் தான் இந்த மோசடி வெளியே தெரிய வந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

மத்திய பாஜகவிற்கு திமுகவின் பதிலடி ஆரம்பம்?: இதற்கிடையில் அரசியல் பின்னணி கொண்ட நபர்கள் இதுபோன்று சர்ச்சைக்குரிய நிலத்தை மோசடியாக பதிவு செய்து கொள்வது வாடிக்கையாக நடைபெற்றாலும் கூட குறிப்பிட்ட பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நயினார் பாலாஜியை குறிவைத்து அவரது பத்திர பதிவு ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து விசாரித்த போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு மத்தியில் ஆளும் பாஜக எதிரிக்கட்சியாக கருதப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி மீதான ரெய்டும், கைதும் அவரின் வரிசையில் தற்போது அமைச்சர் பொன்முடி மீதான ரெய்டும் என திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை திக்குமுக்காட வைத்துள்ளது. இதனிடையே, மத்தியில் ஆளும் பாஜக மீது கடும் கோபத்திலுள்ள திமுக தலைமை அதே ஒன்றிய அரசு துறைகளைக் கொண்டே மாநில அரசு மூலம் மோசடியில் ஈடுபடும் தமிழ்நாடு பாஜக பிரமுகர்களை குறிவைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவிற்கு அழுத்தம் தரும் திமுக: செந்தில் பாலாஜி விவகாரத்திற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பிய பாஜகவினர் பலரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தற்போது, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ-வின் மகன் நயினார் பாலாஜி மீதான விவகாரங்களை தூசித் தட்ட திமுக உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனாலேயே, நயினார் பாலாஜி விவாகரத்தில் அவசர அவசரமாக பத்திரப்பதிவுத்துறை இந்த நடவடிக்கை எடுத்து மோசடியை கண்டறிந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், பாஜகவிற்கு திமுக அழுத்தம் அளிக்கும் பணியை கையில் எடுத்துள்ளதாகவும், 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தங்களுக்கு நெருக்கடி தரும் பாஜகவிற்கு திமுக அரசு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, இது குறித்து நயினார் பாலாஜியிடம் கேட்டபோது, 'அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தன் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக' செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Nainar Balaji:ரூ.100 கோடி பத்திரப் பதிவு ரத்து; அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் - நயினார் பாலாஜி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.