உலக மரபு வாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் திருநெல்வேலி வரலாற்றுப் பண்பாட்டு கள ஆய்வு மையம் இணைந்து நடத்திய சிறப்பு வரலாற்று கருத்தரங்கம் இன்று (நவ. 28) திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்டத்தில் ஏராளமாக உள்ள பாரம்பரிய சின்னங்களைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியங்கள் குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சத்திய வள்ளி எடுத்துரைத்தார்.
மேலும் "பாரம்பரியம் நம் பெருமை அதைக் காப்பது நம் கடமை" என்ற தலைப்பில் திருநெல்வேலி வரலாற்றுப் பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் சிறப்புரை ஆற்றினார்.
நமது பாரம்பரியங்களைக் காப்பாற்றுவதில் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவிப்பது கருத்தரங்கின் நோக்கம் என்று கருத்தரங்கினை தலைமையேற்று நடத்திய அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சத்திய வள்ளி தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களை காவல் உதவி ஆணையர் சேகர் வழங்கினார்.