தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 1ஆம் தேதிமுதல் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. முதல்கட்டமாக மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் நெல்லை மண்டலத்தில் மொத்தம் 32 விழுக்காடு பேருந்துகள் முதல்கட்டமாக மண்டலத்துக்குள்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் இயக்கப்பட்டன.
இதற்கிடையே, செப். 7ஆம் தேதிமுதல் இரு மாவட்டங்களுக்கு இடையிலான சாதாரண பேருந்துகள், வெளியூர்களுக்கு விரைவுப் பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 60 விழுக்காடு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 500 பேருந்துகள் இயக்கப்படகின்றன. தொடர்ந்து படிப்படியாகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் கரோனா இறப்பு எண்ணிக்கையில் குளறுபடி!