ETV Bharat / state

சிவப்பு நிறமாகப் பாய்ந்து வரும் தாமிரபரணி நதி - பொதுமக்கள் அச்சம்! - தாமிரபரணி

நெல்லை: நெல்லை மாவட்டம் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியானது, சிவப்பு நிறமாக மாறி ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவப்பு நிறத்தில் காணப்படும் தாமிரபரணி நதி

author img

By

Published : May 22, 2020, 2:39 PM IST

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும்; நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் தாமிரபரணி நதியானது, பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி, சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

அதிக மூலிகைக் குணம் கொண்ட தாமிரபரணி நதி, கடந்த சில ஆண்டுகளாக மாசு படிந்து காணப்பட்டு வருகிறது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் தாமிரபரணி நதி பாயும், 12 இடங்களில் நீர் மாதிரிகளை நேரில் சேமித்து, ஆய்வறிக்கைத் தயார் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால், அதன் முடிவுகள் வராமல் இருந்து வருகிறது.

சிவப்பு நிறத்தில் ஓடும் தாமிரபரணி நதி

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மாதம் தாமிரபரணி நீர் 20% சுத்தம் அடைந்திருந்ததாக சமூக ஆர்வலர்களும், நீர் மேலாண்மை வல்லுநர்களும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தாமிரபரணி நதியில் வரும் நீரின் நிறம் சிவப்பாகவும், ஒருசில இடங்களில் கறுப்பு கலந்தும் இருந்து வருகிறது.

இதனால், தாமிரபரணி நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் மக்களும் நதியில் குளிக்கும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். மேலும் தாமிரபரணி நதியின் நீர் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் வருவதால், குடிநீருக்காகப் பயன்படுத்தும் பாபநாசம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி பகுதி மக்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து பயன்படுத்த, ஊராட்சி நிர்வாகம் மூலம் 'தண்டோரா' அடித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆலைக்கழிவுகளால் தான் தண்ணீர் நிறம் மாறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பல இடங்களில் ஆய்வு செய்தனர். ஆனால், தாமிரபரணி தண்ணீரானது, அணையிலிருந்து வரும்போதே நிறம் மாறிதான் வருவதாகக் கண்டறியப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, கடந்த சில தினங்களாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் 41 அடியாக தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

இதனால் அணையில் உள்ள சகதி, மட்டும் மரவேர்களில் இருக்கும் மண் கசடுகள் இணைந்து ஆற்றில் வருவதும் நதி நீர் நிறம் மாறக் காரணம் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் பல நாட்களாக, சேர்வலாறு அணை திறக்கப்படாமல் இருந்து, தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் போன்றப் பகுதிகளில் நடக்கும் விவசாயப் பணிகளுக்காக 400 கன அடி வரை, தாமிரபரணி நதியில் சேர்வலாறு அணையில் இருந்து சேர்த்து, தண்ணீர் திறக்கப்படுவதாலும், நீர் நிறம் மாறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறம் மாறிவரும் தண்ணீரால் எந்தப் பாதிப்பும் இருக்காது எனவும், தண்ணீரைக் கொதிக்க வைத்து குடித்தால் கூடுதல் நலன் கிடைக்கும் எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் கேரள மாநிலத்திலோ அல்லது மேற்குத் தொடர்ச்சி மலையிலோ மழைப்பெய்து அணைக்குக் கூடுதல் நீர் வரும்போது தான், இந்த நீரின் நிறம் மாறும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரசுத்துறையில் புதிய பணியிடங்களுக்குத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.