ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம்..! ராதாபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிவிப்பு! - Radhapuram panchayat

Protest against Koodankulam power plant: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கூடங்குளம் அணுமின் நிலையம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 8:42 AM IST

Updated : Dec 1, 2023, 8:58 AM IST

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் செயல்பட்டு தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளின் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

அதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராதாபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளில் சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுரேஷ் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர்களிடம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி உறுப்பினர்கள் நேற்று (நவ.30) கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்படுத்தப்படும் சிஎஸ்ஆர் எனப்படும் சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதிகள் அனைத்தும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ராதாபுரம் ஒன்றியத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பணிகளில் முன்னுரிமை வழங்கி வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய சிஎஸ்ஆர் நிதியிலிருந்து நிரந்தரமாக நியமித்து இலவச புற்றுநோய் தனிப்பிரிவு மற்றும் இலவச டயாலிசிஸ் பிரிவு அமைத்திட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் தவறாக கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயினை முழுவதுமாக அகற்றி மறு சீரமைப்பு செய்து புதிதாக கட்டப்பட வேண்டும். அணு உலையிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படத் தன்மையான விரிவான அறிக்கை மற்றும் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்” என்றார்.

மேலும், “இந்த கோரிக்கைகளுக்கு வருகிற டிசம்பர் 8ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற டிசம்பர் 20ம் தேதி உயர் நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தினை கண்டித்து கூடங்குளம் அணுமின் நிலைய வாயில் முன்பு அல்லது கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பு வாயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலை உணவு திட்டம் - சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன தெரியுமா?

Last Updated : Dec 1, 2023, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.