திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது.
ராதபுரத்தில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, வள்ளியூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது காமராஜர், அம்பேத்கர், பசும்பொன் தேவர் ஆகிய தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பொதுமக்களை கவரும் வகையில், தேர்தல் பிரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் "நெஞ்சை நிமிர்த்தி சொல் ராதாபுரம் நம்பர் ஒன்" என்ற வசனத்துடன், கடந்த 5 ஆண்டுகளில் இன்பதுரை தொகுதிக்கு செய்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களை வீடியோவில் இடம் பெறச் செய்துள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விவசாயிகள் நீண்ட நாள் பிரச்சனையான வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த தேர்தலின் போது முன்வைக்கப்பட்டது. அதே கோரிக்கைகளை பொதுமக்கள் தற்போதைய தேர்தலிலும் முன்வைத்துள்ளனர்.