திருநெல்வேலியில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததைக் கண்டித்தும் ஒருதலைப்பட்சமாக அலுவலர்களுக்கு மட்டும் பதவி உயர்வு மற்றும் பண பலன்கள் வழங்கிவரும் நிர்வாகத்தைக் கண்டித்தும் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் சம்மேளனம் ஈடுபட்டுவருகிறது.
இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 150 அலுவலகங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதி முதல் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராத நிர்வாகத்தை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்காலிகமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.