நாடு முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் அந்த நோயை தடுக்கும் வகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் மூன்று வகையான குடிநீர் வழங்கப்படுகின்றன.
காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர், சளியை தடுக்க ஆடாதொட கசாயம், கைகால் வலியை போக்க அறவம் குடிநீர் ஆகியவை பொதுமக்களுக்கு காலை 7 மணிமுதல் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதையறிந்த பொதுமக்கள் காலையிலேயே வந்து சித்த மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் குடிநீரை குடித்ததுடன், வீடுகளுக்கும் பாத்திரங்களில் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த குடிநீர் தினமும் வழங்கப்படும் என சித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை சிறை - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை