ETV Bharat / state

காவலர் நினைவு தினம்: தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு வீர வணக்கம்! - தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு வீர வணக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று (அக.21) காவலர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு வீர வணக்கம்

author img

By

Published : Oct 21, 2020, 3:43 PM IST

திபெத் எல்லையில் 1959ஆம் ஆண்டு நடந்த சண்டையின்போது எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீர மரணமடைந்தனர். பலர் காணாமல் போனார்கள். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுமதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் வீர மரணம் அடைந்த 264 காவலர்களுக்கு மூன்று சுற்றுகளாக 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோர் காவலர் நினைவிடத்தில் மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு வீர வணக்கம்
தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு வீர வணக்கம்

நாகை

நாகப்பட்டினம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல்படை சார்பாக மூன்றுமுறை 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் நினைவு தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர், நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உள்ளிட்டோர் காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 54 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களை போற்றும் வகையில் 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துணை கமாண்டண்ட் உமா மகேஸ்வரன், சனிஸ் ஆகியோர் முன்னிலையில் சென்ற வருடம் இறந்த 6 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உள்ளிட்டோர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 66 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் முதல் முறையாக காவல்துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதுபோன்று சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர் நினைவு தினம்: நினைவிடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.