திருநெல்வேலி மாவட்ட பாளையங்கோட்டை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் வேலாயுதத்திடம் நேற்று (ஜூலை 15) எஸ்டிபிஐ கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் (அம்பை ரோடு) ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கில் இருந்து சென்னை ஹாட் பப்ஸ், அன்னபூர்ணா உணவகம் வழியாக சந்தை ரவுண்டானா வரைக்கும் இருக்கக் கூடிய சாலையில், அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், "கடந்த வாரத்தில் மட்டுமே இரண்டு விபத்துகள் நடந்து அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, சாலையில் இருபுறமும் வரும் வாகனங்களைப் பிரிக்கும் வகையில் அந்த சாலையின் நடுவே தடுப்பு (DIVIDER) வைக்க ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அங்கு விபத்துக்களைத் தடுக்க முடியும்" என்று மனுவில் தங்களுடையை கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இதையும் படிங்க: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!