ETV Bharat / state

திமுக வார்டு உறுப்பினர் கொலை விவகாரம்.. கருப்பு கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்த மக்கள்!

Nellai dmk member murder: நெல்லையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சுதந்திர தினமான இன்று ஊர் மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு

சுதந்திர தின நாளில் கருப்பு கொடி கட்டி நெல்லை மக்கள் போராட்டம்

author img

By

Published : Aug 15, 2023, 3:49 PM IST

சுதந்திர தின நாளில் கருப்பு கொடி கட்டி நெல்லை மக்கள் போராட்டம்

திருநெல்வேலி: கீழநத்தம் அடுத்த வடக்கூரை சேர்ந்தவர் ராஜா மணி. இவர் கீழநத்தம் ஊராட்சி வார்டு திமுக உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ராஜாமணி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து நெல்லை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா மணியை கொலை செய்த மாயாண்டி (25) இசக்கி(25) மற்றொரு மாயாண்டி(24) ஆகிய மூன்று பேரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆடு மேய்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜா மணியை, சாதிய உள்நோக்கத்தோடு கொலை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். ராஜாமணிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில் தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ராஜாமணி கொலை சம்பவத்தை கண்டித்து ஊர் பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட். 14) ஊரில் பந்தல் அமைத்தும், கருப்பு கொடி கட்டியும் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) இரண்டாவது நாளாக ராஜாமணி கொலையை கண்டித்து வடக்கூரில் ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஏற்கனவே நெல்லையில் கடந்த இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இதையும் படிஙக்: திருப்பூரில் சுதந்திர தின நாளில் சட்டவிரோத மது விற்பனை!

குறிப்பாக சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் ஒருவன் சாதிய மோதல் காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் ஒரு வித பதட்டத்தோடு காணப்படும் சுழலில் ராஜாமணியின் கொலை சம்பவம் போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழந்த ராஜாமணியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ராஜா மணியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து ஊர்மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அரசு நிதி உதவி தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் ராஜாமணியின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து தற்போது ராஜாமணியின் உடலை பெற்றுக் கொள்ள குடும்பத்தினர் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இந்த கருப்புக்கொடி போராட்டம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிஙக்: முதலமைச்சர் காவலர் விருது: தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்க்கு அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.